

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழி பாட்டுத் தலங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கூம்பு ஒலிபெருக் கியை முற்றிலுமாக தடை செய் வது குறித்து தமிழக அரசு 15 நாட் களுக்குள் அரசாணை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த குமாரவேலு என்பவர் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
வழிபாட்டுத் தலங்களில் அதிக இரைச்சல் ஏற்படுத்தும் கூம்பு ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்துதால் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் நிம்மதியாக இருக்க முடிவ தில்லை. குறிப்பாக ஒலி மாசு ஏற்படு கிறது. கூம்பு ஒலிபெருக்கி பயன் படுத்துவது தொடர்பாக உச்ச நீதி மன்றம் கடந்த 2005-ம் ஆண்டில் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அவற்றை யாரும் கடை பிடிப்பதில்லை.
இதுதொடர்பாக நான் போலீ ஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உச்ச நீதி மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு களை தீவிரமாக பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியிருந் தார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை போலீஸார் முழுமையாக செயல்படுத்தி, இது குறித்து பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு இம்மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் ஐஜி அஸ்ரா கார்க் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘கூம்பு ஒலிபெருக்கி பயன்படுத்தியதாக தமிழகம் முழு வதும் 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர் பான உச்ச நீதின்றத்தின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை கூம்பு ஒலிபெருக்கி பயன் படுத்துவோரிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘கூம்பு ஒலிபெருக்கியை தடை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி 15 நாட்களுக்குள் தமிழக அரசு உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 11-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.