சென்னையை உலகத் தரத்தில் மேம்படுத்த CUMTA-வில் 4 துணைக் குழுக்கள்: முழு விவரம் 

சென்னையை உலகத் தரத்தில் மேம்படுத்த CUMTA-வில் 4 துணைக் குழுக்கள்: முழு விவரம் 
Updated on
1 min read

சென்னை: சென்னையை உலகத் தரத்திற்கு மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ள சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தில் 4 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி நிதி உதவியுடன் சென்னை மாநகர கூட்டாண்மை திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இதில் மிக முக்கியமாக இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்டம் மற்றும் சாலைகள் மறு சீரமைப்புத் திட்டம், மல்டி மாடல் இன்டகிரேஷன் என்ற அனைத்து போக்குவரத்து வசதிகளையும் இணைக்கும் திட்டம், வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இந்தத் திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தில் 4 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் முழு விவரம்:

இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்ட துணைக் குழு

  • போக்குவரத்துறை ஆணையர் இதன் தலைவாராக செயல்படுவார்.
  • பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
  • சாலை பாதுகாப்பு, இந்திய வாகனம் சாரா போக்குவரத்து திட்டம், சாலை மேம்பாடு, நடைபாதை உள்ளிட்டவைகள் தொடர்பான பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும்.

மல்டி மாடல் இன்டகிரேஷன் துணைக் குழு

  • சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் இதன் தலைவராக செயல்படுவார்.
  • பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
  • அனைத்து போக்குவரத்து வசதிகளையும் இணைக்கும் மல்டி மாடல் இன்டகிரேஷன் திட்ட பணிகளை இந்த குழு மேற்கொள்ளும்.

நகர்ப்புற போக்குவரத்து மீள்திறன் துணைக் குழு

  • சென்னை மாநகராட்சி ஆணையர் இதன் தலைவராக செயல்படுவார்.
  • பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
  • பேரிடர் காலங்களில் போக்குவரத்து தங்கு தடையின்றி இயங்குவது தொடர்பான திட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும்.

டிஜிட்டல் சென்னை துணைக் குழு

  • தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் சிஇஓ இதன் தலைவராக செயல்படுவார்.
  • பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
  • தரவு மேலாண்மை உள்ளட்ட டிஜிட்டல் சேவைகள் தொடர்பாக திட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in