

வங்கியில் ஒருவரே அதிகளவில் பணம் மாற்றி வருவதால் மற்றவர்கள் பணம் மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், இந்த வாய்ப்பை சிலர் தவறாக பயன்படுத்தி கறுப்புப் பணத்தை மாற்றுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இத்தகைய முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் வங்கிகளில் பணம் மாற்ற வரும் வாடிக்கை யாளர்களின் கைவிரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதற்கான மை மைசூரில் இருந்து வரவழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று காலையில் மை வந்து சேரவில்லை. இதனால் சென்னையில் எந்த வங்கிகளிலும் காலையில் வந்த வாடிக்கையாளர் களின் விரலில் மை வைக்கப்பட வில்லை. இந்நிலையில், நேற்று மதியத்துக்கு மேல் ரிசர்வ் வங்கியில் பணம் மாற்ற வந்திருந்த வாடிக்கை யாளர்களின் கை விரலில் மை வைக்கப்பட்டது. அதேபோல், சென் னையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் வாடிக்கையாளர் களின் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது.