வெளி மாநிலத்தவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

வெளி மாநிலத்தவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
Updated on
1 min read

சென்னையில் தங்கியிருக்கும் வெளி மாநிலத்தவர்களை கணக்கெடுக் கும் பணியை போலீஸார் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் நடைபெறும் பல குற்றச் சம்பவங்களில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக ஈடுபட்டு கைதாகியுள்ளனர். சென்னை தி.நகரில் பணக்கார பெண் கொலையிலும் வெளி மாநில நபரே கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து வெளி மாநிலத்தவர்களை கணக்கெடுக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருபவர் களின் பட்டியலை கடந்த சில ஆண்டு களுக்கு முன்பே போலீஸார் கணக் கெடுத்தனர். பின்னர் நீதிமன்ற வழக்கு உட்பட பல்வேறு காரணங்களால் அது கைவிடப்பட்டது. தற்போது அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட போலீஸார் முடிவு செய் துள்ளனர். சென்னையில் வெளி மாநிலத்தவர்களை வேலைக்கு வைக் கும் நிறுவனத்தினர் மற்றும் கடை உரிமையாளர்கள் அவர்களின் விவரங் களை சேகரித்து தங்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டும் என்று போலீஸார் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இப்படி கொடுப்பதன் மூலம் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பயம் ஏற்படும். இதனால் பல குற்றங்கள் தடுக்கப்படும். குற்றம் செய்பவர்களை உடனடியாகவும் பிடித்துவிட முடியும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களில் 95 சதவீதம் பேர் வெளி மாநிலத்தவர்கள்தான். அவர்களை கட்டுப்படுத்துவதன் மூலம் கள்ள நோட்டு புழக்கத்தையே தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in