

நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட 710 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
40 மைக்ரான் தடிமனுக்கு குறை வாக உள்ள பிளாஸ்டிக் பொருட் கள் மக்கிப்போகாமல், மண் வளத்தை கெடுக்கக் கூடியவை என்பதால், அவை தடை செய்யப் பட்டுள்ளன. தடையை மீறி விற் கப்படும் பிளாஸ்டிக் பொருட் களைப் பறிமுதல் செய்ய காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி உத்தரவின்பேரில், கடந்த ஒரு வாரமாக அதிரடி சோதனை நடத்தப் பட்டு வருகிறது.
மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன் தலை மையில் ஜிஎஸ்டி சாலை, நெல்லிக் குப்பம் சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங் களில் நேற்று சோதனை நடத்தப் பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் 500 கடை களில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. கடைகளில் இருந்து 710 கிலோ பிளாஸ்டிக் கவர்கள், பேப்பர் பிளேட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 15 வியாபாரி களுக்கு ரூ.3,700 அபராதம் விதிக் கப்பட்டது. ஆய்வின்போது செயல் அலுவலர் வெங்கடேசன் உடனிருந்தார்.
தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ் டிக் பொருட்களை பயன்படுத் தவோ, விற்பனை செய்யவோ கூடாது என தடை விதிக்கப்பட் டுள்ள நிலையில், மீறி செயல்படு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து கடைக்காரர்களும் தங்கள் கடையில் சேரும் குப்பைகளை கண்டிப்பாக தரம் பிரித்து வழங்கவேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.