

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக சிறப்பாக பணியாற்றிய பிரபல மருத்துவர் சாரதா மேனனுக்கு ‘அன்னை தெரசா’ விருது வழங்கப்பட்டது.
இந்தியாவின் பிரபல மனநல மருத்துவர்களில் ஒருவர் டாக்டர் சாரதா மேனன். ‘ஸ்கார்ப்’ என்ற அமைப்பின் நிறுவனரான இவர், ஏற்கெனவே பத்மபூஷண் விருது, தமிழக அரசின் அவ்வையார் விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், மனநலம் பாதிக் கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு சிறப்பாகப் பணியாற்றியதற்காக டாக்டர் சாரதா மேனனுக்கு, சென்னையில் உள்ள இந்தியன் டெவலப்மென்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவ னம் சார்பில், ‘அன்னை தெரசா’ விருது நேற்று வழங்கப்பட்டது.
இந்த விருதை பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவருக்கு வழங்கினார். அவர் பேசும்போது, ‘‘சாரதா மேனன், சாந்தா ஆகிய மருத்துவர்களின் சிறப்பான மருத்துவ சேவை காரணமாக சென்னை நகரம் மருத்துவத் தலைநகரமாக திகழ்கிறது’’ என்றார்.
டாக்டர் சாரதா மேனன் தனது ஏற்புரையில், ‘‘சென்னையில் உள்ள மனநல மருத்துவமனையில் 1967-ல் பணியில் சேர்ந்தேன். அப்போது, மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதி கள் கிடையாது.
படிப்படியாக மருத்துவ வசதி கள் பெருகிவிட்டன. மருத்துவப் படிப்பில் சேரும் மாண வர்கள் மனநலப் பாடப் பிரிவில் சேர முன்வர வேண்டும்’’ என்றார்.
இந்தியன் டெவலப்மென்ட் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர் ஏஆர்கே பிள்ளை, தலைமை செயல் அதி காரி டாக்டர் ராஜா சாமுவேல், மூத்த விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜெய ராமன், ‘ரசா’ அமைப்பின் நிறு வனர் டாக்டர் அம்பிகா காமேஷ் வர், முன்னாள் ஐஏஎஸ் அதி காரி பி.எஸ்.ராகவன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா, கிரி டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர் டி.எஸ்.ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.