

தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரையோரம் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த புயல் சின்னம் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஷ்கர் மாநிலம் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.