Published : 24 Jun 2014 10:00 AM
Last Updated : 24 Jun 2014 10:00 AM

5 திருமணங்கள் செய்த ஹோட்டல் அதிபர்: டிஜிபி அலுவலகத்தில் கடைசி மனைவி புகார்

நான்கு முறை திருமணம் நடந்ததை மறைத்து 5-வதாக தன்னை திருமணம் செய்த நெல்லை ஹோட்டல் அதிபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த நஜீரா பானு (28) என்ற பெண் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்திருந்தார். இந்திய தேசிய லீக் கட்சியினர் சிலரும் அவருக்கு துணையாக வந்திருந்தனர். கூடு தல் டிஜிபி ராஜேந்திரனிடம் ஒரு புகார் மனுவை கொடுத்த பிறகு, செய்தியாளர்களிடம் நஜீரா பானு கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.அன்சார் என்பவர் ஹெச்.என்.ஆர். நியூ ருசி என்ற உணவகத்தை நடத்தி வருகி றார். 2-வது மனைவி என்று சொல்லி என்னை அவர் 2009-ம் ஆண்டில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார். அப்போது எனக்கு வயது 25. என் குடும்பத்தினர் கூலித்தொழில் செய்பவர்கள். வீட்டில் நான் 10-வதாகப் பிறந்தவள். வறுமை காரணமாக அவரைத் திருமணம் செய்துகொண்டேன்.

‘கத்தியால் கையை வெட்டினார்’

தனக்கு ஏற்கெனவே 4 திருமணம் நடந்திருக்கிறது என்று ஒரு மாதம் கழித்து சொன்னார். அப்போது முதல் பிரச்சினை தொடங்கியது. வீட்டில் வேலைக்கு வரும் பெண்களை அவர் பாலியல் துன்புறுத்தல் செய்த தும் தெரியவந்தது. இதுபற்றிக் கேட்டபோது என் கைகளை கத்தியால் அறுத்து கொடுமைப் படுத்தினார். பின்னர், வீட்டை விட்டு துரத்திவிட்டார்.

அன்சார் மீது அவரது 4-வது மனைவி லீபாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் அளித் துள்ளார். அந்த வழக்கு மீது விசாரணை நடந்துவருகிறது.

தற்போது எனக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளன. என்னைப் போல வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது. பல பெண்களை ஏமாற் றிய அன்சார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த அவரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு நஜீரா பானு கூறினார்.

அவரது வழக்கறிஞர் கே.பழனி கூறுகையில், ‘‘நெல்லை மாவட் டத்தில் பல இடங்களில் ஹோட்டல் வைத்துள்ளார் அன்சார். வீட்டில் வேலை செய்தவர்களை அன்சார் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது முதல் மகனே பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத் துள்ளார். ஏற்கெனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாளையங்கோட்டை உதவி ஆணையர் மாதவன் உத்தரவிட்டுள் ளார். சட்டப் பிரிவு 498 (a) பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நெல்லை மாவட்ட அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என்றார்.

‘‘ஐந்து பேரை மணம் புரிந்துள்ள அன்சாருக்கு 17 குழந்தைகள் உள்ளன. அதிமுக வில் இருப்பதாகவும் கூறிக் கொள்கிறார். அவருக்கு எதிராக நெல்லை மாவட்டத்தில் பல முஸ்லிம் கட்சிகளே போராட்டம் நடத்தியுள்ளன.

இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவைதான் அன்சார் செய்யும் தவறுகளை வெளியே கொண்டு வந்தன’’ என்று சமூக ஆர்வலர் புலவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x