Published : 31 Oct 2016 08:24 AM
Last Updated : 31 Oct 2016 08:24 AM

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மின்வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழையை முன் னிட்டு மின்வாரியம் சார்பில் பாது காப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இதற்காக தாம்பரம் மின் பகிர்மான கோட்டத்தில் உள்ள களப்பணியாளர்கள் இயற்கை இடர்பாடுகளின்போது துரிதமாக வும், உடனடியாகவும் பணி செய்யும் வகையில் தளவாடப் பொருட்கள், வாகனங்கள் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தாம்பரம் மின்பகிர்மான கோட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து உயர் மற்றும் தாழ்வழுத்த மின் தொடர்புகளில் உள்ள நாட்பட்ட மின்வயர்களை மாற்றும் பணியும், பழுதான மின்கம்பங்களை மாற்றும் பணியும் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேலும் விரைவுபடுத்த முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதே போல் தாழ்வாக உள்ள மின்மாற்றிகள் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை மழைக்காலத்தின்போது மாடம்பாக்கம், பெரும்பாக்கம், தாம்பரம், கோவிலம்பாக்கம் போன்ற இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மழைநீர் உள்ளே புகுந்தது. இந்த முறை இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மணல் மூட்டைகளைக் கொண்டு தடுப்புகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மழைக்கு பிறகு ரூ.55 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x