ஓதுவார், தேவாரம் பாடுவோர் காலி பணியிடம் - நேரடி நியமனத்துக்கு அனுமதி

முதல் பெண் ஓதுவார்
முதல் பெண் ஓதுவார்
Updated on
1 min read

சென்னை: கோயில்களில் ஓதுவார், தேவாரம் பாடுவோர் காலி பணியிடங்கள் குறித்து விளம்பரம் வெளியிட்டு, நேரடி நியமனம் செய்ய அறநிலையத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்களுக்கு ஆணையர் ஜெ.குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஓதுவார், தேவாரம் பாடுவோர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ள கோயில்களை அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர், சரக உதவி ஆணையர்கள், விடுபடாமல் கண்டறிய வேண்டும். அந்த பணியிடங்களை நேரடிநியமனம் மூலம் நிரப்ப ஏதுவாக விளம்பர அறிவிப்பு வெளியிட மண்டல இணை ஆணையர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. விளம்பர அறிவிப்பின் நகலை அவர்கள், ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

தமிழ்நாடு இந்து சமய அற நிறுவனங்களின் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) விதிகள் 2020-ல் விதி எண் 9-ல் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, இப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, இதன்மூலம் கோயில் நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in