Published : 22 Oct 2016 08:40 AM
Last Updated : 22 Oct 2016 08:40 AM

இணையதளம் மூலம் மின்வாரிய டெண்டர்கள்

மின்வாரியத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கான டெண்டர்களை இணையதளம் மூலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழக மின்வாரியம் உபகரணங் கள், நிலக்கரி உள்ளிட்டவற்றை தனியாரிடமிருந்து வாங்குகிறது. இவ்வாறு வாங்கும்போது டெண்டர் விடப்பட்டு வாங்கப்படுகிறது. நாளிதழ்களில் விளம்பரம் செய்து டெண்டர் விடப்படுகிறது.

மின்வாரிய அதிகாரிகள் பரி சீலனை செய்தனர். இதையடுத்து, அனைத்து டெண்டர்களையும் இணையதளம் மூலம் விட தீர்மானிக் கப்பட்டுள்ளது. இதன்படி, சுரங்கம், கட்டுமானம் மற்றும் இயந்திர பாதுகாப்பு பிரிவுகள் இணையதளம் மூலம் டெண்டர் விட்டுள்ளன. அதேபோல், உபகரணங்கள் மற் றும் நிலக்கரி ஆகிய பிரிவுகளும் இணையதளம் மூலம் டெண்டர் விட தீர்மானித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x