

காங்கிரஸ் கட்சியில் அனைத்து மட்டத்திலும் நிர்வாகிகள் விரைவில் மாற்றி அமைக்கப் படுவார்கள் என கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக தனது சொந்த மாவட்டமான புதுக் கோட்டைக்கு நேற்று வருகை தந்த சு.திருநாவுக்கரசர், கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கட்சியில் நிர்வாகிகள் மாநிலம் முழுவதிலும் விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளனர். இளைஞர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்படும்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதி களில், திமுகவை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளோம். கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான், உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும்கூட காவிரி மேலாண்மை வாரி யத்தை மத்திய அரசு அமைக்க வில்லை. இதுகுறித்து மத்திய
அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தாமல், காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சி யின் செயல்பாடு குறித்து பேசி வருவது இயலாமைத்தனத்தை வெளிப்படுத்துவதாகும்.
தமிழகத்தில் கொள்ளை, கொலை, துப்பாக்கிச் சூடு போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த வேண்டும். மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சந்தித்ததுடன், அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்க தேவையான ஆலோசனை களையும் அளித்தார். ஆனால், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வரை பிரதமர் மோடி சந்திக் காதது ஏன்?
மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறேன். இன்னும் சில கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளேன்.
தமிழக முதல்வர் மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்பிய பிறகு, அவரையும் சந்திப்பது குறித்து ஆலோசிக்கப்படும். திமுக அழைப்பு விடுத்துள்ளபடி சென்னையில் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்றார்.