தமிழக அரசின் திருத்தப்பட்ட புதிய மின் கட்டணம் எவ்வளவு? - முழு விவரம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் புதிய திருத்தப்பட்ட மின்கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி புதிய மின்கட்டணம் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் வாரியம் நடவடிக்கை எடுத்துவந்த நிலையில், கட்டண உயர்வுக்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில்,மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் சென்னையில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழக மின் வாரியம் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி கடனில் இருப்பதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது. எனினும், கருத்துக்கேட்புக் கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்களும், சிறு, குறு தொழில் நிறுவனத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்படி, புதிய மின் கட்டணத்தை அமல்படுத்தப்படுகிறது. அதேவேளையில், 100 யூனிட் இலவச மின்சாரம், குடிசை, விசைத்தறி, கைத்தறி, விவசாயம் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

மின் கட்டண உயர்வு விவரம்:

தொழில், கடைகளின் மின்கட்டண உயர்வு விபரம்:

  • தற்காலிக இணைப்புக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.12.00
  • தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ. 6.50
  • அரசு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.7.00
  • தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.7.50
  • கடைகள் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 8.50
  • மாதம் நிலையான கட்டணம் ரூ.550

வீட்டு உபயோகத்திற்கான முந்தைய கட்டணம் vs புதிய கட்டணம் ஒப்பீடு:

  • முதல் 100 யூனிட்கள் வரை எந்தவித கட்டணமும் இல்லை
  • 101 - 200 யூனிட்களுக்கு முன்பு ரூ.170 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.225 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது.
  • 201 - 300 யூனிட்களுக்கு முன்பு ரூ.530 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.675 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 301 - 400 யூனிட்களுக்கு முன்பு ரூ.830 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1,125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 401-500 யூனிட்களுக்கு முன்பு ரூ.1,130 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1,725 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in