கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Published on

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ வங்கக் கடலில் ஆந்திரக் கடலோரப் பகுதிகளை ஒட்டி, காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுவடையும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது.

இதனால் தமிழகத்தில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

திங்கட்கிழமையன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செவ்வாய்க்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in