கோவை தென்னமநல்லூர் கிணற்றில் மூழ்கிய கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.
கோவை தென்னமநல்லூர் கிணற்றில் மூழ்கிய கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

கோவை | அதிகாலையில் 120 அடி ஆழமுள்ள கிணற்றில் கார் பாய்ந்து 3 இளைஞர் உயிரிழப்பு

Published on

கோவை: கோவை வடவள்ளியில் உள்ள நவாவூர் பிரிவைச் சேர்ந்தவர் ஆதர்ஷ் (18). தனியார் பொறியியல் கல்லூரி மாணவர். அதேபோல், எஸ்.வி. நகரைசேர்ந்தவர்கள் ரோஷன் (19), ரவிகிருஷ்ணன்(18), நந்தனன் (18).

நண்பர்களான இவர்கள் பூலுவப்பட்டியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு நேற்று அதிகாலை அங்கிருந்து காரில் புறப்பட்டனர்.

காரை ரோஷன் ஓட்டி வந்தார். போளுவாம்பட்டி - தொண்டாமுத்தூர் சாலையில், தென்னமநல்லூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பழனிசாமி என்பவரது தோட்டத்தின் சுவரை இடித்துக் கொண்டு அங்கிருந்த 120 அடி ஆழ கிணற்றில் பாய்ந்தது. கிணற்றில் 75 சதவீதம் நீர் இருந்தது.

கிணற்றில் விழுந்த வேகத்தில் காரிலிருந்து வெளியே வந்த ரோஷன், நீரில் மூழ்காமல் தப்பி கரையேறினார். ஆனால், கார் மூழ்கியது. இதில் மூவரும் இறந்தனர். போலீஸார், தீயணைப்புத் துறையினர் கிரேன் உதவியுடன் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு கார் மற்றும் ரவிகிருஷ்ணன், ஆதர்ஷ், நந்தனன் ஆகியோரது சடலங்களை மீட்டனர். காரை ஓட்டி வந்த ரோஷன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in