முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்: முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே நம்பிக்கை

முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்: முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே நம்பிக்கை
Updated on
1 min read

முதல்வர் ஜெயலலிதா 10 நாட் களுக்குள் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று முன்னாள் சுகா தாரத் துறை அமைச்சரும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரு மான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே நம் பிக்கை தெரிவித்தார்.அப்போலோ மருத்துவமனைக்கு நேற்று வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உடல்நலக் குறைவு காரணமாக இந்த மருத்துவமனையில் இருந்த போது அவரை கவனித்துக் கொள் ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று இங்கு முதல்வர் ஜெய லலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச் சைகள் குறித்தும் அவரது உடல் நிலை பற்றியும் மருத்துவர்கள், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை ஆகியோரிடம் விசா ரித்தேன். அவர்கள் கூறியதைக் கேட்ட பிறகு எனக்கு மனநிறைவு ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் எம்.ஜி.ஆருக்கு பக்கவாதம் ஏற்பட்டபோது நானும், டாக்டர் பிரைட்மேன் உட்பட அனை வரும் சேர்ந்து நல்ல பயிற்சி பெற்ற பிசியோதெரபிஸ்டை வரவழைக்க ஏற்பாடு செய்தோம். அதன்படி, தென்கொரியாவில் இருந்து பயிற்சி பெற்ற பிசியோதெரபிஸ்ட் ஒருவரை வரவழைத்து எம்ஜிஆருக்கு ஒரு மாதம் பிசியோதெரபி சிகிச்சை அளித்தோம். அவர் பூரண குணமடைந்தார்.

எம்ஜிஆரால் நிற்க முடிய வில்லை. நடக்க முடியாது, கையைக் கூட அசைக்க முடியாது என்றெல் லாம் சொன்னார்கள். ஆனால், சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து திரும்பியபோது விமானத் தில் இருந்து எம்ஜிஆர் வீறு நடைபோட்டு இறங்கி வந்தார்.

இப்போது முதல்வர் ஜெய லலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக தென் கிழக்கு ஆசியாவில் மிகவும் பிரபல மான சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து 2 பெண் பிசியோதெரபிஸ்டுகள் வந் துள்ளனர். இருவரும் முதல்வருக்கு நல்லமுறையில் சிகிச்சை அளித்து வருவதாக தம்பிதுரை தெரிவித்தார்.

நுரையீரலில் இருக்கும் சளியை ஆன்டி பயாட்டிக் மூலம் வெளி யேற்றுவதற்கு பதிலாக பிசியோ தெரபி அளிக்கும்போது வேகமாக வெளியே வந்துவிடும். அதனால் ஆன்டிபயாட்டிக்கின் தாக்குதல் இருக்காது. அத்துடன் நுரையீரலுக் கும் காற்று நன்றாக போகும். நான் ஒரு மருத்துவமனை நடத்திக் கொண் டிருக்கிறேன். இந்தத் துறையில் பல ஆண்டுகளாக இருந்திருக்கிறேன். எனவே, ஒரு வாரம் அல்லது 10 நாட் களுக்குள் முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து வீடு திரும்பு வார். எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு ஹண்டே தெரிவித்தார்.

ஹூண்டாய் நிர்வாகிகள்..

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (ஹெச்எம்ஐஎல்) நிறு வனத்தின் சார்பில் நிறுவனத்தின் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை துணைத் தலைவர் பாலச்சந்திர தத்தா மற்றும் மனிதவள பிரிவின் மூத்த துணைத் தலைவர் ஸ்டீபன் சுதாகர் ஆகியோர் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று முதல் வர் உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தனர். முதல்வர் விரைவில் குணமடைய நிறுவனத் தலைவர் அனுப்பிய வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in