பிளாஸ்டிக் பொருட்கள் வருகையால் நலிவடைந்த மூங்கில் தொழில்: தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை

பிளாஸ்டிக் பொருட்கள் வருகையால் நலிவடைந்த மூங்கில் தொழில்: தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை
Updated on
2 min read

பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட மூங்கில் பொருட்களின் பயன்பாடு, பிளாஸ்டிக் பொருட்களின் வருகைக்குப் பின்னர் பெரிதும் குறைந்து விட்டது. இதனால், மூங்கில் முடைதல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழைத் தொழிலாளர்கள் பாதிக் கப்பட்டு, அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

புல் வகையைச் சேர்ந்த மூங்கில் 40 அடி உயரத்துக்கு மேல் வள ரும். கேரள மாநிலம் அடிமாலி, பெரம்பாலூர், தமிழகத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்குக் கொண்டுவரப்படும் மூங்கிலை வெட்டி, சரமாக மாற்றி, சீவி வைத்துக்கொள்கின்றனர். பின்னர், அதைப் பயன்படுத்தி தக்காளி கூடை, மில் கூடை, செடிக் கூண்டு, உப்புக்கூடை, கஞ்சி வடிக்கும் கூடை, அப்பளத் தட்டு ஆகியவற்றைச் செய்கின்றனர்.

வீடுகள், நிறுவனங்களின் உள் அலங்காரத்துக்கும் (இன்டீரியர் டெக்கரேஷன்) மூங்கில்கள் பயன்படுத்தப்படுகின்றன. வீடுகளுக்கே சென்று, மூங்கில் சீலிங், மேஜை, நாற்காலி, கட்டில் உள்ளிட்டவற்றை மூங்கில் தொழிலாளிகள் செய்து தருகின்றனர். கோவை அருணாச் சலம் ரோடு பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் இத்தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக இத்தொழிலில் ஈடுபட் டுள்ள மாணிக்கம்(42) கூறியதாவது: ஒரு மூங்கிலின் விலை ரூ.300. அதைப் பொருட்களாகச் செய்தால் ரூ.450 கிடைக்கும். அதாவது, ஒரு மூங்கிலுக்கு ரூ.150 மட்டுமே கிடைக்கும். நாள் முழுக்க வேலை செய்தாலும் ரூ.300 மட்டுமே கிடைக் கும். அதுவும் மழைக்காலத்தில் கிடைக்காது. திறந்தவெளியில் அமர்ந்து வேலை செய்வதால், மழையின்போது மூங்கில் முடைய முடியாது. மேலும், மூங்கில் பொருட்கள் மழையில் நனைந்தால் கருப்பாக மாறிவிடும். அப்போது, ரூ.100 மதிப்பிலான பொருளை ரூ.30-க்கு மட்டுமே விற்க முடியும்.

இதுபோன்ற பிரச்சினைகளால், பல தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நாங்கள், மிகுந்த ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகிறோம். பிளாஸ்டிக்கின் வரு கைக்குப் பின்னர் மூங்கில் பொருட் களின் பயன்பாடு பெரிதும் குறைந்து விட்டது. மூங்கிலால் செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு மாற் றாக, பிளாஸ்டிக்கைப் பயன் படுத்தத் தொடங்கிவிட்டனர்.

மூங்கிலை நீண்ட நாள் அப்படியே வைத்திருக்கவும் முடியாது. பச்சைத் தன்மை போய்விட்டால் அதை முடைய முடியாது. எவ்வளவு சிரமப்பட்டாலும் இதில் கிடைக்கும் வருவாய், அன்றாட நாட்களைக் கழிப்பதற்கே போதவில்லை. இதனால், அடுத்த தலைமுறை இத்தொழிலில் ஈடுபட விரும்ப வில்லை. இதே நிலை நீடித்தால், வருங்காலத்தில் மூங்கில் முடைதல் தொழிலைச் செய்ய ஆட்கள் இருக்க மாட்டார்கள். இதனால், நாங்கள் அரசின் உதவியை எதிர்நோக் கிக் காத்திருக்கிறோம். அரசு அலு வலகங்களில் பிளாஸ்டிக் பயன் பாட்டைத் தவிர்த்து, மூங்கில் பொருட்களைப் பயன்படுத்த உத்தர விட வேண்டும். மூங்கில் அறுக்கும் இயந்திரம், துளைபோடும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் வாங்க உதவ வேண்டும்.

தற்போது மூங்கில் கூடைகள் மற்றும் பொருட்கள் மழையிலும் வெயிலிலும் காய்ந்து வீணாகின்றன. எனவே, கிடங்குடன் கூடிய தொழிற்கூடம் அமைத்துத் தர வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தால் எங்களுக்கு எவ்விதப் பயனுமில்லை. எனவே, நல வாரியத்தை முறையாகச் செயல்படுத்துவதுடன், நேரடியாக எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முன்வர வேண்டும்.

காதி கிராப்ட் மூலம் பல்வேறு மரப் பொருட்களை வாங்கி, விற்பனை செய்கின்றனர். அதே போல, மூங்கில் பொருட்களையும் எங்களிடம் இருந்து வாங்கி, காதி கிராப்ட் மூலம் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in