Published : 18 Oct 2016 09:12 AM
Last Updated : 18 Oct 2016 09:12 AM

வைரஸ், பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து வழங்குவதில் கவனம் தேவை: மருத்துவர்களுக்கு டாக்டர் அகோக் மாகசூர் அறிவுரை

குரோம்பேட்டை  பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சுவாச நோய் சிகிச்சையில் நுண்ணுயிர் கொல்லிகளை முறை யாக பயன்படுத்துவது குறித்த ‘மருத்துவர் திருவேங்கடம் சொற்பொழிவு 2016’ என்ற நிகழ்ச்சி நேற்று கல்லூரி வாளகத்தில் நடந்தது.

இதில் மும்பை இந்துஜா மருத்துவனையின் முதுநிலை நெஞ்சக நோய் நிபுணர் மருத்துவர் அசோக் மாகசூர் கலந்து கொண்டு பேசும்போது, ‘நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து வழங்குவதில் மருத்துவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். வைரஸ், பாக்டீரியா இவை இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. வைரஸ்ஸால் வந்த நோய் எது பாக்டீரியாவால் வந்த நோய் எது என்பதை நன்கு ஆய்வுசெய்து அதன் பிறகு தடுப்பு மருந்து வழங்க வேண்டும். வைரஸூக்கு வழங்கப்படும் தடுப்பு மருந்து பாக்டீரியாவால் உருவான நோய்களுக்கும் பாக்டீரியாவால் உருவானவற்றுக்கு வைரஸுக் கான தடுப்பு மருந்து வழங்கக் கூடாது.

கடந்த 5 ஆண்டுகளில் பெரிய அளவில் தடுப்பு மருந்துகள் ஏதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் 2005 முதல் 2009 வரை நோய் தடுப்பு மருந்து உட்கொள்வதில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் மருந்து விற்பனையும் 60 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோய்களின் தன்மைகளை கண்டறிந்து, எதனால் அந்த நோய் வந்தது என்பதை அறிந்து தடுப்பு மருந்து வழங்க வேண்டும்’என அவர் பேசினார்.

பேராசிரியர் கே .வி. திருவேங் கடம் தமது உரையில், ‘தற்கால சூழ்நிலைக்கு ஏற்றார்போல மருத்துவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நோயின் தன்மையை அறிந்து தடுப்பு மருந்து வழங்க வேண்டும். நோய்களுக்கு ஒரே வகையான மருந்துகளை வழங்காமல் புதிய மருந்துகளை வழங்க வேண்டும்’ என்றார்.

கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவன இணைத் தலைவர் என்.முரளி பேசும்போது, ‘திருவேங் கடம் தலைசிறந்த பேராசிரியராக இருந்தார். அவரைப் பின்பற்றி மருத்துவ மாணவர் கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு மருத்துவ துறையை மேன் மேலும் வளர்க்க வேண்டும். இதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும்’ என்றார். நிறைவாக மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இடையே கலந் துரையாடல் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x