Published : 09 Sep 2022 06:26 AM
Last Updated : 09 Sep 2022 06:26 AM

திரைப்பட பயிற்சி நிறுவன தலைவராக ராஜேஷ் நியமனம்

நடிகர் ராஜேஷ்

சென்னை: தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர்ராஜேஷ் நியமனம் செய்யப்பட் டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்கள் மற்றும் கலை உணர்வுகளை பயிற்றுவிக்கும் முதன்மை நிறுவனமாக தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும்தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்விளங்கி வருகிறது.

பலவகையானதிரைப்படங்கள், தொலைக்காட்சிநிகழ்ச்சிகள் தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்பங்களையும், பிறதிரைப்படத் துணைப் பாடங்களையும், மாணவர்களுக்கு கற்றுத் தருவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

தமிழக அரசின் செய்தி, மக்கள் தொடர்பு துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்நிறுவனம் சென்னை தரமணியில் 15.25 ஏக்கர் பரப்பில் செயல்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி நிறுவனத்தில் ஒருதலைவர் பணியிடம் தோற்றுவிக்கப் பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள இந்நிறுவனத்தின் தலைவராக திரைப்பட நடிகர் ராஜேஷை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x