இளையான்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

இளையான்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்த அந்த அமைப்பினர்.
இளையான்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்த அந்த அமைப்பினர்.
Updated on
1 min read

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இளையான்குடி கலிபா தெருவைச் சேர்ந்தவர் முகமது ரோஸ்லான்(45). பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநிலப் பேச்சாளராக உள்ளார். இவரது வீட்டுக்கு ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் விகாஸ்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று வந்தனர்.

அப்போது கடந்த 4 மாதங்களாக முகமது ரோஸ்லான் வீட்டுக்கு வரவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தி சில ஆவணங்களை வாங்கிச் சென்றனர்.

அப்போது சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெளியேற வேண்டுமென கோஷமிட்டனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தேவையின்றி கூட்டம் கூடியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது இளையான்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in