திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: பயணிகளின் நெருக்கடியைக் குறைக்கும் வகையில், திருநெல்வேலி-தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்புக் கட்டண ரயில் சேவை அடுத்த ஆண்டுஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 18, 25, அக்டோபர் 2, 9, 16, 23, 30, நவம்பர் 6, 13, 20, 27, டிசம்பர் 4, 11, 18, 25, அடுத்த ஆண்டு ஜனவரி 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 7.20 மணிக்கு வாராந்திர சிறப்புக் கட்டண ரயில் (எண்: 06004) புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 19, 26, அக்டோபர் 3, 10, 17,24 31, நவம்பர் 7, 14, 21, 28, டிசம்பர் 5, 12, 19, 26, அடுத்த ஆண்டு ஜனவரி 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) இரவு 10.20 மணிக்கு சிறப்பு ரயில் (எண். 06003) புறப்பட்டு, மறுநாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. இவ்வாறு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in