

தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனை யாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி நிருபர்களிடம் கூறியதாவது:
எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2.24 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 1.40 ரூபாயும் டீலர் கமிஷனாக வழங்குகின்றன. இத்தொகை மிகக் குறைவாக உள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. இத்தொகையை அதிகரித்து தருமாறு மத்திய அரசு அமைத்த குழுவும் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இதுவரை கமிஷன் தொகையை உயர்த்தி தர எண்ணெய் நிறுவனங்கள் முன்வரவில்லை.
எனவே இதனை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று (நேற்று) மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை விற்பனை நிலையங்களில் விளக்குகளை அணைத்து விற்பனை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 570 பெட்ரோல் பங்குகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 200 பெட்ரோல் பங்குகள் உட்பட நாடு முழுவதும் 54 ஆயிரம் பெட்ரோல் பங்குகள் இதில் பங்கேற்றன.
எங்கள் கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்காவிட்டால் வரும் 26-ம் தேதி மீண்டும் மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை விற்பனை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். நவம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து தொடர் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடைபெறும். மாதத்தின் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமைகளில்..
நவம்பர் 5-ம் தேதி முதல் விற்பனை நிலையங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும். மேலும், ஒவ் வொரு ஞாயிற்றுக்கிழமையும் விற் பனை நிலையங்களில் விற்ப னையை நிறுத்தி போராட்டம் நடத்தப் படும். இவ்வாறு முரளி கூறினார்.