பாரத் கெளரவ் திட்டத்தில் மதுரை - ஹரித்துவாருக்கு தனியார் ரயில்

பாரத் கெளரவ் திட்டத்தில் மதுரை - ஹரித்துவாருக்கு தனியார் ரயில்
Updated on
1 min read

சென்னை: பாரத் கெளரவ் திட்டத்தின் கீழ், மதுரையில் இருந்து ஹரித்துவாருக்கு வரும் 22-ம் தேதி தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மக்கள் கண்டுகளிக்கும் வகையில் ‘பாரத் கெளரவ்’ ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் முதல் ரயில் சேவை கோவை-ஷீரடிக்கு இயக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது தனியார் ரயில் மதுரையில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்டது.

இந்நிலையில், பாரத் கெளரவ் திட்டத்தின் கீழ், மதுரையில் இருந்து ஹரித்துவாருக்கு வரும் 22-ம் தேதி தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வரும் 29-ம் தேதி ஹரித்துவாரைச் சென்றடையும்.

பினனர், ஹரித்துவாரில் இருந்து செப்டம்பர் 30-ம் தேதி புறப்பட்டு, அக்டோபர் 3-ம் தேதி மதுரையை அடையும். இந்த ரயில் பிரயாக்ராக், கயா, வாரணாசி வழியாக இயக்கப்படுகிறது. டிராவல் டைம்ஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனம் இந்த ரயிலை இயக்க உள்ளது.

விருப்பமுள்ள பயணிகள் ularail.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in