

திருச்சி மாநகர துணை மேயர் பதவியை 10 நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்த ஆசிக் மீரா மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் திருச்சி மாநகர காவல்துறை புதன் கிழமை வழக்கு பதிவு செய்துள்ளது.
துர்கேஸ்வரி என்கிற 27 வயது இளம்பெண், “திருச்சி மாநகர துணை மேயராக இருந்த ஆசிக் மீரா தன்னை சுமார் 6 ஆண்டு கள் காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஒரு குழந்தைக்கு தாயாக்கி விட்டு குடும்பம் நடத்தாமல் ஏமாற்றி னார்’’ என்று பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் பாலியல் மோசடி புகார் செய்திருந்தார். இந்த புகார் மீது கடந்த 10 நாட்களாக சட்ட வல்லுநர் களிடம் பல கட்ட ஆலோசனை நடத்தியது காவல்துறை.
துர்கேஸ்வரியை கவுன்சலிங் குக்கு வரச் சொல்லியும் ஆறு கேள்விகள் அடங்கிய வினாத் தாளை வழங்கி அதற்கு பதிலளிக்க வும் கோரியது காவல்துறை. இதனால் காவல்துறை விசாரணை ஒரு தலைப்பட்சமாக செல்வதாகக் கருதிய துர்கேஸ்வரி தரப்பினர் தங்களது சட்டப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய் தனர்.
மக்கள் உரிமைப் பேரவை, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், மகளிர் ஆயம், மதிமுக மகளிர் அணி, சமநீதி வழக்கறிஞர்கள் சங்கம், பெண்கள் எழுச்சி இயக்கம், தமிழ் தேசிய பொது உடைமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு கள் ஒன்றிணைந்து வெள்ளிக் கிழமை காலை திருச்சி ரயில் சந்திப்பு அருகேயுள்ள காதி கிராப்ட் மையம் அருகே, ஆசிக் மீரா மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய் திருந்தனர். இதற்காக காவல் துறை அனுமதி பெற விண்ணப்பித்த இந்த போராட்டத்தின் ஒருங்கிணைப் பாளரான வழக்கறிஞர் பானுமதி, “காவல்துறை அனுமதி வழங்க வில்லையென்றாலும் போராட்டம் நடத்துவோம்” என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதன்கிழமை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிக் மீரா மீது வழக்கு பதிய திருச்சி மாநகர காவல் துறை யினருக்கு உத்தரவிடக்கோரி துர்கேஸ்வரி தரப்பில் வழக்கறிஞர் பானுமதி மனு செய்தார். விவ காரம் கைமீறிப் போவதை உணர்ந்து கொண்ட காவல் துறை அதிகாரிகள் மேலிடத்துக்கு தகவல் தெரிவித்து ஒப்புதல் பெற்று புதன்கிழமை மதியம் வழக்கு பதிந்தனர்.
ஆசைவார்த்தை கூறி ஏமாற்று தல், நம்பிக்கை மோசடி, பாலி யல் பலாத்காரம், கொலை மிரட் டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் விடு முறையிலிருப்பதால் கன் டோன்மென்ட் காவல் நிலைய ஆய் வாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மாநகர காவல் ஆணை யர் உத்தரவிட்டிருக்கிறார்.
இதுகுறித்து துர்கேஸ்வரியின் வழக்கறிஞர் பானுமதி ‘தி இந்து’ விடம் கூறுகையில், “காவல் துறை யினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதால் போராட் டத்தை ஒத்திவைத்துள்ளோம். ஆசிக் மீராவை கைது செய்து விசாரணை நடத்த வேண் டும். இந்த குற்றத்தில் தொடர் புடைய அனைவரையும் கைது செய்து விரைந்து தீவிர நடவடிக்கை எடுக்காவிடில் ஒத்திவைத்த போராட்டத்தை மீண்டும் நடத்துவது பற்றி பரிசீலிப்போம்” என்றார்.