

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தலையணை மற்றும் முக்கூடலில் நடைபெற்ற இரு வேறு சம்பவங்களில், தாமிர பரணி நதியில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். விடுமுறைக்குச் சுற்றுலா வந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் புதுச்சேரியைச் சேர்ந்த பக்கிரி மகன் வசந்தராஜ்(25), கண்ணன் மகன் சீனிவாசன்(30), ஆறுமுகம் மகன் சதீஷ்குமார்(25), காரைக்கால் நெடுங்காடு குமரகுரு மகன் நக்கீரன்(27) ஆகியோர் 5 நாள் சுற்றுலாவாக கன்னியாகுமரி, பாபநாசம் உள்ளிட்ட இடங்களுக்கு வந்தனர்.
கன்னியாகுமரிக்குச் சென்று விட்டு கடந்த 8-ம் தேதி பாபநாசத்துக்கு வந்த அவர்கள், அங்கு உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். 9-ம் தேதி பிற்பகலில் பாபநாசம் தலையணையில் குளிக்கச் சென்ற அவர்கள், இரவாகியும் விடுதிக்குத் திரும்ப வில்லை. இதனால் விடுதி ஊழியர்கள் விக்கிரமசிங்கபுரம் போலீஸாருக்கு தகவல் தெரி வித்தனர்.
நேற்று முன்தினம் இரவில் வசந்தராஜின் சடலம் தலை யணையில் ஒதுங்கியது. இதனால், மற்ற 3 பேரும் தலை யணையில் மூழ்கி இறந்திருக் கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர். அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலும் 3 பேரின் சடலங்களும் மீட் கப்பட்டன.
தலையணையில் குளித்த 4 பேரும் பாறைக்கு அடியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று விக்கிரமசிங்கபுரம் போலீஸார் தெரிவித்தனர்.
முக்கூடலில் 3 பேர் பலி
இதுபோல், திருநெல்வேலி அருகே உள்ள முக்கூடலிலும் தாமிரபரணியில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் கள் 3 பேர் உயிரிழந்தனர். திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த பிரபாகரன் மகன் கிருபாகரன்(21). செங்கல்பட்டில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். அவருடன் செங்கல்பட்டைச் சேர்ந்த உஸ்மான் மகன் தமீம்அன்சாரி(21), குமாரவேல் மகன் சோபன்பாபு(21) ஆகி யோரும் படித்து வந்தனர்.
தசரா விடுமுறைக்காக, தமீம் அன்சாரியையும், சோபன்பாபுவையும் தனது சொந்த ஊருக்கு கிருபாகரன் அழைத்து வந்திருந்தார். நேற்று முன்தினம் அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் முக்கூடலில் தாமிரபரணியில் குளிக்கச் சென்றனர். ஆற்றங்கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு முக்கூடல் முத்துமாலையம்மன் கோயில் பின்புறம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தபோது புதைமணலில் 3 பேரும் சிக்கினர்.
சேரன்மகாதேவி தீயணைப் புத் துறையினர் அங்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்குப் பின் 3 பேரின் சடலங்களும் மீட்கப் பட்டன. பாப்பாகுடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.