3 தொகுதி தேர்தலில் ம.ந.கூட்டணி போட்டியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

3 தொகுதி தேர்தலில் ம.ந.கூட்டணி போட்டியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடாததன் மூலம், அவர்கள் வேறு ஏதோ ஒரு கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழகத் தில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சி யும் சரியாக செயல்படவில்லை.

தமிழக முதல்வரை, பிரதமர் மோடி ஏன் பார்க்க வர வில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேட் டுள்ளார். முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதில், பிரதமர் கூடுதல் கவனம் செலுத்துவதால்தான், லண்டன் மருத்துவர்களும், எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளிக்க வந்துள்ளனர்.

மக்களுக்கான குடிநீர் திட்டங் களை அரசு செயல்படுத்தவில்லை. தாமிரபரணி ஆற்றில் இருந்து 20 டிஎம்சி நீர் கடலில் வீணாகக் கலக்கிறது. அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த பொங்கல் பண்டி கையின்போது ஜல்லிக்கட்டு நடத்து வதற்குத் தேவையான ஏற்பாடு களை மத்திய அரசு செய்துள்ளது.

பாஜக பங்கேற்காது

முன்னதாக கோவையில் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டம், எந்த விதத்திலும் தீர்வை கொடுக்காது. அரசியல் காரணங்களுக்காக, காலதாமதமாக நடத்தப்படும் இந்த அவசியமற்ற கூட்டத்தில் பாஜக கலந்துகொள்ளாது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in