‘மோடி கபடி லீக்’ ஜோதிக்கு வேலூரில் பாஜகவினர் வரவேற்பு

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மோடி கபடி லீக் ஜோதிக்கு நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மோடி கபடி லீக் ஜோதிக்கு நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
Updated on
1 min read

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக விளை யாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் கபடி லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாநில அளவிலான போட்டிகள் மதுரை யில் வரும் 27-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், கலந்து கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு அணி வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதன்படி, வேலூர் மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 17, 18-ம் தேதிகளில் காட்பாடி செங்குட்டையில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதிலிருந்து சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வேலூர் மாவட்டம் சார்பில் மாநில அள விலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

மோடி கபடி லீக் ஜோதி சென்னையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. பல்வேறு மாவட்டங்கள் வழியாக வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலை நேற்று அடைந்த ஜோதியை பாஜக மாநில பொதுச்செயலர் கார்த்தியாயினி வரவேற்றார்.

சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மோடி கபடி லீக் ஜோதி குடியாத்தத்துக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in