

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கில் சென்னை தொழிலதிபர் தீனதயாள் கைது செய்யப்பட்டார். ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரின் வீடு மற்றும் குடோனில் சோதனை நடத்தி ஏராளமான பழங்காலச் சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து தீனதயாளுக்கு சிலைகளைக் கடத்தி விற்பனை செய்த சென்னையைச் சேர்ந்த புஷ்பராஜன் என்பவர் புதுச்சேரியில் ஒரு வீட்டில் சிலைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்து போலீஸார் 11 சிலைகளை மீட்டனர்.
புதுச்சேரி வந்து இப்பணிகளைச் செய்த தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஜஜி பொன் மாணிக்கவேல் 'தி இந்து'விடம் நேற்று கூறியதாவது: வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே உள்ள மேல்பாடி கிராமத்தில் இருக்கும் சோமநாத ஈஸ்வரன் கோயிலுக்கு உரிய 11 சிலைகளை புதுச் சேரியில் இருந்து மீட்டுள்ளோம். இந்தச் சிலைகள் மீட்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கள் தற்போது பிரான்ஸில் உள்ளனர்.
பிரான்ஸில் குடியுரிமை பெற்றுள்ள இவ்வீட்டின் உரிமையாளர்களான வனிலா, அவரது கணவர் பிரான்ஸிஸ் புஷ்பராஜ் என்ற விஜய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்.
அவர்களின் வீட்டில் இருந்த சிலைகள், விலைக்கு வாங்கப்பட்டதாகத் தெரிவித்தால் எங்கு வாங்கினீர்கள்? அதற்கான ஆதாரங் களை சமர்பிக்க வேண்டுமென அந்த நோட்டீஸில் குறிப்பிடுவோம். நோட்டீஸுக்கு உரிய பதில் தராவிட்டால் அவர்களை பிரான்ஸில் இருந்து தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் இருந்து பறிமுதல் செய் யப்பட்ட சிலைகள் அனைத்தும் இதுவரை 5 முதல் 6 நபர்களின் கை மாறி இங்கு வந்துள்ளதாக உறுதியான தகவல்கள் உள்ளன.
பழங்காலச் சிலைகள் வைத்திருப்பதற் கான சான்று இருந்தாலும், அது தங்களுக்கு உரிமையானது என்று யாரும் உரிமை கோர முடியாது. அந்தச் சிலை எக்காலத்தைச் சேர்ந்தது? எங்கே இருந்தது என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
புஷ்பராஜன் புதுச்சேரியில் அதிக நாட்களுக்கு கலைக் கூடம் நடத்தியுள்ளார். அவருக்கும் தீனதயாளுக்கும் பல ஆண்டுகள் தொடர்பு உள்ளது. அதன் மூலம் வெளிநாடு களுக்குக் கடத்தல் நடந்துள்ளதும் தெரிகிறது. பஞ்சலோகக் கோயில் சிலைகளின் நிறத்தை மாற்றி புதிய கலைப் பொருட்கள் எனக் கூறி எடுத்துச் சென்று பின்னர் ரசாயனக் கலவையைத் தெளித்து பழமையான கலைப் பொருள் என விற்கும் வழக்கத்தையும் கடத்தல்காரர்கள் பின்பற்றுகின்றனர்.
சிலைக் கடத்தலில் தொடர் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உள்ளோம் என்றார்்.