Published : 06 Sep 2022 06:38 AM
Last Updated : 06 Sep 2022 06:38 AM

பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராக பொதுமக்களை திரட்டி போராட வேண்டும்: பிரகாஷ் காரத் வேண்டுகோள்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘இந்தியாவின் இருளை அகற்றுவோம் - மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’ என்ற தலைப்பில், மக்கள் சந்திப்பு இயக்க நிறைவு பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலர் எல்.சுந்தரராஜன் தலைமைவகித்தார். இதில் பிரகாஷ் காரத் பேசியதாவது:

மத்திய பாஜக அரசின் 8 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து தரப்பும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, ஜனநாயகம், மதச்சார்பின்மை மீதும் பாஜக தாக்குதல் நடத்துகிறது. பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டு, கார்ப்பரேட்டுகளை வாழ வைக்கிறது.

எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தும் பாஜக, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிறது. பாஜக அல்லாத மாநிலங்களை ஆளும் முதல்வர்கள், அமைச்சர்களைத் தாக்க, மத்தியப் புலனாய்வு, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தை தொட்டுள்ளது. பொதுத் துறை தனியார் மயமாக்கப்படுகிறது. எனவே, பாஜக அல்லாத மாநிலங்களை ஆளும் கட்சிகள், பாஜக கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகளைப் பின்பற்றுவதுடன், மக்களைத் திரட்டிபாஜக அரசுக்கு எதிராகப் போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x