3 தொகுதிகளிலும் திமுக சிறப்பான வெற்றி பெறும்: ஸ்டாலின்

3 தொகுதிகளிலும் திமுக சிறப்பான வெற்றி பெறும்: ஸ்டாலின்
Updated on
1 min read

முறையாக தேர்தல் நடந்தால் 3 தொகுதிகளிலும் திமுக சிறப்பான வெற்றியைப் பெறும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.

திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ''காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்து விட்டு காத்திருக்கிறோம். முறையான பதில் வரவில்லை என்றால், ஏற்கெனவே சொன்னது போல அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவசாய அமைப்புகளை அழைத்து கலந்தாலோசித்து, தலைவர் கருணாநிதியுடன் ஆலோசித்து உரிய முடிவை விரைவில் அறிவிப்போம்.

எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், ஜனநாயக முறைப்படி இந்த தேர்தலையும் சந்திக்க திமுக தயாராக இருக்கிறது. அதனால்தான் வேட்பாளர்களுக்கான விருப்ப மனுக்களை இன்று அறிவாலயத்தில் பெற்றுக் கொண்டு இருக்கிறோம். மனு அளித்து உள்ளவர்களிடம் நாளை நேர்காணல் நடைபெறும். அதன் பிறகு தலைவர் கருணாநிதி வேட்பாளர்களை முறையாக அறிவிப்பார். முறையாக தேர்தல் நடந்தால் 3 தொகுதிகளிலும் திமுக சிறப்பான வெற்றியைப் பெறும்'' என்றார் ஸ்டாலின்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in