

பெண்களுக்கு தொடர்ந்து பாலி யல் தொந்தரவு அளித்த வந்த ஊழியரை நிரந்தர பணிநீக்கம் செய்து இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐசிஎஃப் தொழிற் சாலைக்கு சொந்தமாக பெண்கள் விடுதி உள்ளது. ஐசிஎஃப்-பில் பயிற்சி பெற வரும் பெண்கள் அங்கு தங்குகின்றனர். சதீஷ்குமார் (30) என்பவர் அந்த விடுதிக்கு பாதுகாப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலை யில், வெளியூரிலிருந்து வந்து அந்த விடுதியில் தங்கி பணி யாற்றி வந்த 3 பெண்களுக்கு சதீஷ்குமார் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அந்த பெண்கள் மூவரும் ஐசிஎஃப் பொது மேலாளர் எஸ்.மணியிடம் நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில் சதீஷ்குமாரை நிரந்தர பணிநீக்கம் செய்து ஐசிஎஃப் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற செயல்களில் யாரே னும் ஈடுபட்டால் தொடர்புடைய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐசிஎஃப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.