புதுவை நெல்லித்தோப்பு உட்பட 4 தொகுதி தேர்தல்: அதிமுகவில் 24 பொறுப்பாளர்கள் நியமனம்

புதுவை நெல்லித்தோப்பு உட்பட 4 தொகுதி தேர்தல்: அதிமுகவில் 24 பொறுப்பாளர்கள் நியமனம்
Updated on
1 min read

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப் பரங்குன்றம், புதுச்சேரியின் நெல் லித்தோப்பு தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனிக்க, அதிமுக வில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச் சர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இத்தேர்தலுக்கான அறி விக்கை நேற்று வெளியிடப்பட் டுள்ளதுடன், வேட்பு மனுத் தாக்கலும் தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலைப் பொறுத்த வரை, அதிமுக, திமுக, பாமக கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. பாஜக போட்டி யிடுவதாக அறிவித்தாலும், இது வரை வேட்பாளரை அறி விக்கவில்லை. தேமுதிக போட்டி யிடுவது பற்றி இன்னும் அறிவிக்க வில்லை.

இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை அறிவித்ததும் தேர்தல் பொறுப்பாளர்களையும் அறிவித்து விட்டது. ஆனால், எப்போதும் முந்திக் கொள்ளும் அதிமுக, அறிவிக்கவில்லை. முதல் வர் ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதால் தாமதமாகியது. இந்நிலையில், 3 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி யில் நெல்லித்தோப்பு தொகுதி களுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற் கான அறிவிப்பை முதல்வர் ஜெய லலிதாவின் ஒப்புதல்படி, அதிமுக தலைமை அலுவலகம் வெளி யிட்டுள்ளது.

இதன்படி, அரவக்குறிச்சி தொகு திக்கு, அமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, பி.தங்கமணி, கே.சி.கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சிறுபான்மையினர் பிரிவு செய லாளரான ஏ.அன்வர் ராஜா எம்பியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை தொகுதிக்கு அமைச் சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், ஆர்.துரைக் கண்ணு, ஜி.பாஸ்கரன், மற்றும் எம்பிக்கள் ஆர்.வைத்தியலிங்கம் மற்றும் பி.குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் நெல்லித் தோப்பு தொகுதிக்கு, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் மற் றும் அதிமுக அமைப்புச் செயலாளர் செ.செம்மலை, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் சொரத்தூர். ஆர்.ராஜேந்திரன், புதுச்சேரி மாநில செயலாளர் பெ.புருஷோத்தமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள னர். இவர்களுக்கு கட்சியினர் தேர்தல் பணியில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தலைமை அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in