மருத்துவமனையிலிருந்து டிடிவி தினகரன் டிஸ்சார்ஜ்

டிடிவி தினகரன் | கோப்புப் படம்
டிடிவி தினகரன் | கோப்புப் படம்
Updated on
1 min read

உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் குணமடைந்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் திருமணம் உள்ளிட்டபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தஞ்சாவூருக்கு கடந்த வாரம்வந்தார். இந்நிலையில், செப்.1-ம் தேதிஇரவு டிடிவி.தினகரனுக்கு வயிற்று வலி,வாந்தி ஏற்பட்டது.

இதனால், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், உணவு ஒவ்வாமையால் கிருமித் தொற்று, நீர்ச்சத்து குறைபாடு ஆகியவை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குணமடைந்ததையடுத்து நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து கல்லீரல் மற்றும் குடல் நோய் சிறப்பு மருத்துவர் சி.பிரசன்னாகூறியபோது, “டிடிவி.தினகரன் செப்.1-ம் தேதி வயிற்றுவலி, வாந்தி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது முழு குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in