

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைத் திரட்டி, தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது போலீ ஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2-ம் தேதி ஐஎஸ் பயங்கர வாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி கேரளாவைச் சேர்ந்த 6 பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் கைது செய்தனர். இந்த அமைப்பினருக்கு கோவை யில் உள்ள சிலருடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மூலம் தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதும் விசார ணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் காணா மல் போனவர்களின் பட்டியலில் உள்ள 21 பேர் குறித்த ரகசிய விசாரணையில், அவர்கள் தீவிர வாத இயக்கமான ஐஎஸ் அமைப் பினரின் செயல்பாடுகளால் ஈர்க்கப் பட்டு சென்றது தெரியவந்தது.
அதில், சதி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் மன்சீத் (எ) உமர் அல் இந்தி (30), டி.ஸ்வாலிக் முகமது (26), பி.சஃப்வான் (30), ஜசிம் (25), ராம்ஷாத் (25), கோவை தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த அபு பஷீர் (29) ஆகிய 6 பேர் கடந்த 2-ம் தேதி தேசிய புலனாய்வு ஏஜென்சியால் கைது செய்யப்பட்டனர். கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சியின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கோவையில் உள்ள சிலருக்கு இந்த அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
அதை உறுதி செய்யவே கோவையில் 2 நாளாக தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கேரளத்தில் கைதான வர்கள் அளித்த வாக்குமூலத்தில் தென் மாநிலங்களில் முக்கிய இடங்களில் பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும், அதற்காக 24- 30 வயதுள்ள இளைஞர்களை குறிவைத்து ஆட்களை திரட்டி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
கோவையில் ஊடுருவலா?
கோவையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படும் 4 பேரிடம், தேசிய புலனாய்வு அமைப்பினர் 2-வது நாளாக நேற்றும் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், யாரையும் கைது செய்ததாக போலீஸார் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. நள்ளிரவில் தெற்கு உக்கடம் பகுதியில் வீடுகளில் சோதனையிட்டு, சந்தேகப்படும்படியான சிலரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருவதும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.