

வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன் ராஜு. இரும்பு வியா பாரி. இவர், ‘ரூ.15 லட்சம் மதிப் புள்ள வெளிநாட்டு பைக் ரூ.4 லட்சத்துக்கு கிடைக்கும்’ என்ற விளம்பரத்தை இணையதளத்தில் பார்த்துள்ளார்.
அதில், இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பைக் வாங்க விருப்பம் தெரிவித் துள்ளார். எதிர்முனையில் பேசிய இளைஞர், முதலில் ரூ.50 ஆயி ரத்தை குறிப்பிட்ட வங்கி கணக் கில் செலுத்துமாறு கூறியுள்ளார்.
அதன்படி ரவீந்திரன் ரூ.50 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்திவிட்டு, அதே செல் போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரவீந்திரன் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸார் விசாரணை யில் அம்பத்தூர் விஜயலட்சுமி புரத்தைச் சேர்ந்த வாசிம் இர் ஷித் இந்த மோசடியில் ஈடுபட் டது தெரிய வந்தது. பெங்களூ ரில் பதுங்கி இருந்த அவரை நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள வாசிம் இர்ஷித், ஏரோ நாட்டிக்கல் இன்ஜினீயரிங் முடித்து உள்ளார். சரளமாக ஆங்கிலம் பேசும் திறன் கொண்டவர். இதுபோல் குறைந்த விலைக்கு கார், பைக் வாங்கி தருவதாக 50க்கும் மேற்பட்டோரிடம் ரூ.40 லட்சத்துக்கும் மேல் அவர் மோசடி செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.