

மு.க.அழகிரிக்கு நெருக்கமாக இருந்த திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, தற்போது அவரைப்போல் தென் மாவட்ட திமுகவில் அதிகாரம் மிக்க நபராக வலம் வருகிறார். திருப்பரங்குன்றம் தேர்தல் பொறுப்பாளராக உள்ள அவர் ஆளும்கட்சியை எதிர்த்து திமுகவை வெற்றி பெறச் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.
திமுகவில் மு.க.அழகிரி தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தபோது தென் மாவட்ட கட்சி செயல்பாடுகள் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. அப் போது அமைச்சராகவும், திண்டுக் கல் மாவட்ட திமுக செயலாள ராகவும் இருந்த ஐ.பெரியசாமி மு.க.அழகிரிக்கு நெருக்கமாக இருந்தார். மு.க.அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் கட்சியில் நேரடி பிரச்சினை ஏற்பட்டபோது, இரு வருக்கும் பாலமாக செயல்பட்டார்.
அதன்பிறகு, பொட்டு சுரேஷ் மு.க.அழகிரிக்கு நெருக்கமாக இருந்ததால் ஐ.பெரியசாமி அவரிடம் இருந்து முற்றிலுமாக விலகினார். ஆரம்பத்தில் கட்சியில் எல்லோரும் ஐ.பெரியசாமியை அழகிரி ஆதரவாளர் என்றே சொல் வார்கள். ஆனால், கட்சியில் அழகிரியா, ஸ்டாலினா என வந்த போது ஐ.பெரியசாமி ஸ்டாலின் பக்கம் முழுமையாக சாய்ந்தார்.
அதன்பிறகு தென் மாவட்ட திமுக செயலாளர்கள், நிர்வாகி கள் ஒவ்வொருவராக மு.க.அழகிரி யிடம் இருந்து விலகி ஸ்டாலின் பக்கம் வந்தனர். தென் மாவட்ட திமுகவில் ஸ்டாலினுக்கு செல் வாக்கை ஏற்படுத்தியவர்களில் ஐ.பெரியசாமி முக்கியமானவர்.
அதனால், கடந்த சட்டப்பேர வைத் தேர்தல், அதற்கு முந்தைய தேர்தலில் திமுகவில் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் வாரிசுகளுக்கு ‘சீட்’ கிடையாது என அறிவித்தபோது, திண்டுக்கல் மாவட்டத்தில் ஐ.பெரியசாமிக்கும், அவரது மகனுக்கும் ஸ்டாலின் சீட் வழங்கினார். தற்போதும் ஐ.பெரியசாமி திமுக மாநில துணைப்பொதுச் செயலாளராகவும் எம்எல்ஏவாகவும் இருக்கிறார். அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் மாவட்டச் செயலாளராகவும் எம்எல்ஏவாகவும் இருக்கிறார். தற்போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், ஐ.பெரியசாமி பரிந்துரை செய்த சரவணனையே ஸ்டாலின் வேட்பாளராக்கி உள் ளார்.
தென் மாவட்ட திமுகவில் ஒரு காலத்தில் எப்படி மு.க.அழகிரி செல்வாக்கு பெற்றிருந்தாரோ தற்போது அவரது இடத்தில் அறி விக்கப்படாத தென் மண்டல அமைப் புச் செயலாளராக ஐ.பெரியசாமி இருப்பதாக கட்சியினர் சொல் கின்றனர். அந்த அளவுக்கு ஸ்டாலி னிடமும் நம்பிக்கைக்கு உரியவராக ஐ.பெரியசாமி உள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர் தலில் பலம்கொண்ட ஆளும் கட்சியை எதிர்த்து திமுக களம் இறங்கி உள்ளது. ஐ.பெரிய சாமிக்கு ஏற்கெனவே திருமங்கலம் இடைத்தேர்தலில் மு.க.அழகிரியு டன் இணைந்து தேர்தல் பணி யாற்றிய அனுபவம் இருக்கிறது. அதிமுகவை எதிர்த்து திருப்பரங் குன்றம் தொகுதியில் திமுகவின் கவுரவத்தைக் காப்பாற்றுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.