

போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் அனைவருக்கும் தவணை முறையில் பணப்பலன்கள் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங் களில் ஓய்வுபெற்ற ஓட்டுநர், நடத்து நர்கள் மற்றும் பிற பணியாளர் களுக்கு பணிக்கொடை, விடுமுறை கால ஊதியம், ஓய்வூதிய ஒப்ப டைப்பு ஆகிய பணப்பலன்கள் பல ஆண்டுகளாக வழங்கப்பட வில்லை. இவற்றைக் கேட்டு போக்கு வரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் கள், பிற பணியாளர்கள் 75 பேர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அனைவருக்கும் 6 சதவீத வட்டியுடன் 12 தவணையில் பணப் பலன்கள் வழங்கவும், தவணை தவறினால் 18 சதவீத வட்டியுடன் வழங்கவும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மதுரை, நெல்லை, கும்பகோணம், திருச்சி, காரைக்குடி, திண்டுக்கல் ஆகிய மண்டலங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 31 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து உயர் நீதி மன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
போக்குவரத்துக் கழக ஊழியர் களுக்கு தவணை முறையில் பணப்பலன்கள் வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவு இறுதியானது. அப்படி இருக்கும்போது தனித்தனி யாக உத்தரவு பெற்று வந்தால்தான் பணப்பலன்கள் வழங்க முடியும் என ஓய்வுபெற்ற ஊழியர்களை நிர்பந்திப்பது நியாயமற்றது.
ஒரு விஷயத்தில் நிரந்தர முடிவு எடுக்கப்பட்டால், அதே விஷயத் துக்காக தனித்தனி உத்தரவு பெற வேண்டிய அவசியம் இல்லை. எனவே, தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படை யில் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் அனைவ ருக்கும் தவணை முறையில் பணப்பலன்கள் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண் டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவால் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போக்கு வரத்துக் கழக ஊழியர்களுக்கு நீதிமன்றம் செல்லாமலேயே பணப்பலன்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.