எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளம் ஆசிரியர்கள்தான்: டிடிவி தினகரன் ஆசிரியர் தின வாழ்த்து

டிடிவி தினகரன் | கோப்புப் படம்.
டிடிவி தினகரன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: ஒரு மனிதர் தன் வாழ்நாளில் பெறும் எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளமிடுவது ஆசிரியர்கள்தான் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''அறப்பணியாம் ஆசிரியர் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

'வகுப்பறைகளில்தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது' என்று சொன்ன முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவது மிகப் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது. ஏனெனில், ஒரு மனிதர் தன் வாழ்நாளில் பெறும் எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளமிடுவது ஆசிரியர்கள்தான்.

தன்னிடம் கற்றுக்கொண்டவர்கள் எவ்வளவு பெரிய உயரத்திற்கு போனாலும் அதைப் பார்த்து மகிழ்வதும் வாழ்த்துவதும் ஆசிரியர்களுக்கு மட்டுமே உரிய தனி குணமாகும்.

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மட்டுமின்றி வாழ்வின் எத்தனையோ அம்சங்களை நமக்கு கற்றுக்கொடுத்த ஒவ்வொருவரையும் இந்த ஆசிரியர் தினத்தில் நினைவில் நிறுத்தி வணங்கி, வாழ்த்தி மகிழ்ந்திடுவோம். நம் வாழ்வின் எல்லா வெற்றிகளுக்கும் 'குரு வணக்கம்' எப்போதும் துணை நிற்கும்.'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in