

திருவண்ணாமலையில் அதிமுகவி னர் நடத்திய பால்குட ஊர்வல நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
நிகழ்ச் சிக்கு தகுந்த பாதுகாப்பு நட வடிக்கை எடுக்கவில்லை என்பதால் காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் அடைய வேண்டி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் மாலை பால்குட ஊர்வ லம் நடைபெற்றது. பச்சையம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. கோயிலில் பால்குடம் வழங்கியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, திருவண்ணாமலை வ.உ.சி. நகர் 4-வது தெருவில் வசித்த சம்பந்தம் மனைவி கமலாம்பாள்(60) உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 16 பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கமலாம்பாளின் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் தி.மலை நகர போலீ ஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊர்வலத்தில் 5 ஆயிரம் பேர் திரள்வார்கள் என்று தெரிந்திருந் தும், தகுந்த பாதுகாப்பு நடவடிக் கையை காவல்துறை முன்கூட்டியே எடுக்காததால் உயிரிழப்பு ஏற்பட்ட தாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து, வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.