Published : 05 Sep 2022 04:30 AM
Last Updated : 05 Sep 2022 04:30 AM

சிவகங்கையில் ஒற்றை காலில் நின்று ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றிய 500 மாணவர்கள்

சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஒற்றைக் காலில் நின்று தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவர்கள்.

சிவகங்கை

சிவகங்கையில் ஒற்றை காலில் நின்று 500 மாணவர்கள் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

மூவேந்தர் சிலம்பம் மற்றும் தமிழரின் பாரம்பரிய கலை வளர்ச்சிக் கழகம் சார்பில், உலக சாதனை முயற்சியாக சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளை யாட்டு மைதானத்தில் மாணவர்கள் ஒற்றைக் காலில் நின்று தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், தஞ்சை ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த 500 மாணவர்கள் ஒற்றைக் காலில் நின்று தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர்.

இந்த சாதனையை குளோபல் வேர்ல்டு ரெக்கார்ட் என்ற நிறுவனம் பதிவு செய்தது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், சிவகங்கை நகராட்சித் தலைவர் துரை ஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சித் தலைவர் மணிமுத்து, சிவகங்கை மாவட்ட மல்லர் கம்பம் சங்க மாவட்டச் செயலாளர் கலைச்செல்வம், கப்பல் கேப்டன் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x