ராம்குமாரின் பிரேத பரிசோதனை முடிவுகளை தர கோரிக்கை

ராம்குமாரின் பிரேத பரிசோதனை முடிவுகளை தர கோரிக்கை
Updated on
1 min read

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், செப்டம்பர் 18-ம் தேதி சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

இது திட்டமிட்ட கொலை என்று ராம்குமாரின் குடும்பத்தினர் தொடர்ந்து கூறிவருகின்றனர். இந் நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப் படி ராம்குமாரின் உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் சுதிர்குப்தா தலைமையில் 5 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் கடந்த அக்டோபர் 1-ம் தேதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இந்நிலையில் ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை முடிவுகள், புகைப்படங்கள், வீடியோ காட்சி களை தங்களுக்குத் தர சம்பந்தப் பட்ட குற்றவியல் நடுவருக்கு உத்தரவிடக் கோரி, ராம்குமாரின் தந்தை பரமசிவன் சார்பி்ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.கிருபாகரன் முன்பு வழக்கறிஞர் ஏ.ரமேஷ் முறையிட்டார். அதையடுத்து நீதிபதி இதுதொடர்பாக முறையாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in