Published : 10 Jun 2014 10:34 AM
Last Updated : 10 Jun 2014 10:34 AM

குரூப்-4 பணிகளுக்கான 2-வது கட்ட கவுன்சலிங்: ஜூன் 16-ல் தொடங்குகிறது

இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளுக்கான 2-வது கட்ட கவுன்சலிங் ஜூன் 16-ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் (டிஎன்பிஎஸ்சி) செய லாளர் மா.விஜயகுமார் திங்கள் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

3 நாட்கள் கவுன்சலிங்

குரூப்-4-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிகளுக் கான தேர்வு கடந்த 25.8.2013 அன்று நடந்தது. இதற்கான முதல்கட்ட கவுன்சலிங் மூல மாக மொத்தமுள்ள 3,704 காலி யிடங்களில் 3,523 இடங்கள் நிரப்பப்பட்டன.

எஞ்சியுள்ள 181 காலியிடங் களை நிரப்புவதற்கான 2-வது கட்ட கவுன்சலிங் ஜூன் 16, 17, 18 தேதிகளில் நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு முதல் நாள் காலை 10 மணிக்கும், கவுன்சலிங் மறுநாள் காலை 8 மணிக்கும் சென்னை பாரிமுனை பஸ் நிலையம் அருகேயுள்ள உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத் தில் நடக்கும். இதுபற்றிய விவரம் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

கவுன்சலிங்கிற்கு வரும்போது, அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை தவறாமல் எடுத்துவர வேண்டும். தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தபோது, 10-ம் வகுப்பை தமிழ்வழியில் படித்தது பற்றி குறிப்பிட்டவர்கள் மட்டும் அதற்கான சான்றிதழை தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து வாங்கிவர வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சலிங்கிற்கு விண்ணப்ப தாரர்கள் பரிசீலிக்கப்படும் போது, இருக்கின்ற காலியிடங் களைப் பொருத்தே அனுமதிக் கப்படுவார்கள். எனவே, கவுன் சலிங்கிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணிநியமனம் வழங்கப்படும் என்று உறுதியாக கூற இயலாது. கவுன்சலிங்கிற்கு வரத் தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

அனுமதி இல்லை

விண்ணப்பதாரர்கள் தவிர அவர்களுடன் வரும் நபர்கள் எவரும் தேர்வாணைய அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கைக்குழந்தையுடன் வரும் பெண் விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளி விண்ணப் பதாரர்கள் ஆகியோருடன் துணைக்கு ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x