Published : 04 Sep 2022 04:20 AM
Last Updated : 04 Sep 2022 04:20 AM

கோவையில் 56 கிராம ஊராட்சிகளில் இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம்

கோவை

வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 56 கிராம ஊராட்சிகளில் இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.சித்ராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

கோவை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் கீழ்வரும் 56 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, ஆனைமலை வட்டாரத்தில் திவான்சாபுதூர், தென்சித்தூர், சோமந்துறை, பில்சின்னம்பாளையம், ரமணாமுதலிபுதூர் ஊராட்சிகள், அன்னூர் வட்டாரத்தில் ஒட்டர்பாளையம், பச்சாபாளையம், பிள்ளியப்பாளையம் ஊராட்சிகள், காரமடை வட்டாரத்தில் ஜடயம்பாளையம், ஓடந்தறை ஊராட்சிகள், கிணத்துக்கடவு வட்டாரத்தில் கப்பளாங்கரை, கக்கடவு, தேவராயபுரம், பொட்டையாண்டி புரம்பு, கோவிந்தாபுரம், டின்றாம்பாளையம், குதிரையாலாம்பாளை யம் ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதேபோல், மதுக்கரை வட்டாரத்தில் மலுமிச்சம்பட்டி, வழுக்குப்பாறை, பாலத்துறை ஊராட்சிகள், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் குருடம்பாளையம், சின்னதடாகம் ஆகிய ஊராட்சிகள், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் தேவம்பாடி, குள்ளக்காபாளையம், நல்லூத்துக்குளி, புளியம்பட்டி, ஆவலப்பம்பட்டி, ராசக்காபாளையம், கிட்டாசூராம்பாளையம், பூசாரிப்பட்டி, ஒக்கிலிபாளையம், காபிலிபாளையம் ஊராட்சிகள், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் தென்குமாரபாளையம், ஜிஞ்சு வாடி, கோமங்கலம்புதூர், நல்லாம்பள்ளி, எஸ்.மலையாண்டிபட்டிணம், வக்கம்பாளையம் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

அதேபோல், சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில் வெள்ளமடை, அக்கரசாமக்குளம், அத்திபாளையம், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் ஜே.கிருஷ்ணாபுரம், போகம்பட்டி, வடவேடம்பட்டி, ஜல்லிப்பட்டி, பாப்பம்பட்டி, இடையர்பாளையம் ஊராட்சிகள், சூலூர் வட்டாரத்தில் பட்டணம், பீடம்பள்ளி, மயிலம்பட்டி, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் மத்துவராயபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், வெள்ளிமலைப்பட்டினம் ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வேளாண் கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 5 பட்டதாரி இளைஞர்களுக்கு நிதியுதவி பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பயனடைந்த தகுதியுடைய பயனாளிகளுக்கு மட்டும் 25 சதவீத மானியமாக அதிகபட்ச நிதியுதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகள் 21 வயது முதல்41 வயதுக்கு உட்பட்டவராக, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்தவராகவும், அரசு, தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x