

காஞ்சிபுரத்தில் தொடர் கனமழை காரணமாக சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த 500 நெல் மூட்டைகள் சேதமடைந்தன.
வாலாஜாபாத், படப்பை சாலையில் தாழையாம்பட்டு பகுதியில் சாலை ஓரமாக நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த ஒருவாரமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலை ஓரமாகவைக்கப்படிருந்த நெல் மூட்டைகள் நனைத்து நெல்மணிகள் முளைத்துள்ளன.
இந்தப் பகுதி விவசாயிகள் நகையை அடமானம் வைத்தும் வங்கியில் கடன் வாங்கியும், வட்டிக்கு பணம் வாங்கியும் விவசாயம் செய்துள்ளனர். ஆனால் மழை காரணமாக அறுவடை செய்த 500 நெல் மூட்டைகள் நனைந்து வீணாகின. நெல் மூட்டைகளை பாதுகாக்க நுகர்பொருள் சேமிப்பு கிடங்கு இல்லாததே காரணம் என்றுவிவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
வாலாஜாபாத் அருகே அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க முறையான கிடங்கு அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.