

விழுப்புரம் நகராட்சியில் முறையாக குடிநீர் வழங்குவதில்லை என அதிமுக, காங். கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகளில் சுமார் 37 ஆயிரம் வீடுகள் உள்ளன. சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். விழுப்புரம் நகராட்சி தற்போது திமுக வசம் உள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் நகரில் குடிநீர் விநியோகம் எப்படி செய்யப்படுகிறது என்று நகராட்சியின் 1-வது வார்டு அதிமுக கவுன்சிலர் கோல்டு சேகரிடம் கேட்டபோது, " எனது வார்டில் உள்ள திருவள்ளுவர் நகரில் 15 தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இப்போதுதான் இங்கு தண்ணீர் விநியோகம் செய்ய நகர்மன்ற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
குடிநீரில் சாக்கடை தண்ணீர் கலப்பதாக சில நாட்களுக்கு முன் நகர்மன்ற கூட்டத்திலிருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனாலும் அக்குறையை நகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை" என்றார்.
இதுகுறித்து 42-வது வார்டு காங்கி ரஸ் கவுன்சிலர் சுரேஷ்ராமிடம் கேட்ட போது, "நாள்தோறும் முறையாக குடிநீர்வழங்கப்படுவதில்லை. இதனை கண் காணிக்க வேண்டிய அலுவலர்களும் கண்காணிப்பதில்லை.
மேலும் நகரில்குப்பைகளை முழுமையாக அகற்றுவ தில்லை. இதற்காக மாதம் ஒன்றுக்கு ரூ. 47லட்சம் செலவிடப்படுகிறது. பாதாள சாக் கடை திட்டப் பணிகள் முழுமையாக முடியவில்லை. தோண்டப்பட்ட வீதிகள் அப்படியேகிடக்கிறது. மழைக்காலம் தொடங்கி விட்டது.ஒவ்வொரு வீதியும் தனித்தனி தீவுகளாகவே உள்ளன" என்றார்.
ரூ.2 கோடி குடிநீர் வரி பாக்கி: குடிநீர் விநியோகம் குறித்து விழுப்புரம் நகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, "விழுப்புரம் நகர் மற்றும் புதிதாக சேர்க் கப்பட்ட ஊராட்சிகளில் 59 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 1 கோடியே 11 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
நகராட்சியில் ஒவ்வொருவருக்கும் 80 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவது இலக்கு. 37 ஆயிரம் வீடுகள் இருந்தாலும் நகராட்சியின் கணக்குபடி 11,552 குடிநீர் இணைப்புகள் மட்டுமே உள்ளன. நகராட்சிக்கு தெரியாமல் தன்னிச்சையாக குடிநீர் இணைப்புகள் பொருத்திய 150 இணைப்புகளை நகராட்சி கணக்குக்கு கொண்டுவந்துள்ளோம்.
குடிநீர் வரியாக சுமார் ரூ. 2 கோடி பாக்கி உள்ளது. மின் வாரியத்திற்கு மின் கட்டணமாக ரூ. 4.81 கோடி செலுத்தவேண்டியுள்ளது. விரைவில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் விழுப்புரம் நகராட்சிக்கு கூடுதல் குடிநீர் வருவதற்கு வாய்ப் புள்ளது. அந்த தண்ணீர் வந்தால் குடிநீர் தட்டுப்பாடு முற்றிலும் நீங்கிவிடும்" என்றனர்.