சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநருக்கு விரைவில் விளக்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்து ஆளுநர் சில விளக்கங்களைக் கோரியிருந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் விரைவில் அதற்கு பதில் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவில், சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழக முதல்வர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் துணை வேந்தர் நியமனங்களையும் தமிழக அரசே மேற்கொள்ளும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்து தமிழக ஆளுநர் சில விளக்கங்களைக் கேட்டு தமிழக மருத்துவத்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்ததார். சித்த மருத்துவப் பல்கலைக்கழத்தின் வேந்தராக முதல்வரை நியமிப்பது தொடர்பாகவும், ஏற்கெனவே இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கும் உள்ள நிலையில், சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மட்டும் தமிழக அரசு எப்படி நியமனங்களை மேற்கொள்ளும் என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

ஆளுநரின் கேள்விகளுக்கு இன்னும் ஒருசில நாட்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் சார்பில், விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநரின் கேள்விகளுக்கு பதில் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in