

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவு: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பது மாநில அரசின் உரிமை என்று முதல்வர் மீண்டும் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. இது மாநில சுயாட்சிக்கு வலுசேர்க்கும்.
துணைவேந்தரை தமிழக அரசேநியமிப்பது தொடர்பாக பேரவையில் நிறைவேற்றியுள்ள சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துஅரசிடம் ஆளுநர் விளக்கம் கோரியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைக்கு மதிப்பளித்து ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.