Published : 08 Oct 2016 09:11 AM
Last Updated : 08 Oct 2016 09:11 AM

‘தி இந்து’ - பொதிகை தொலைக்காட்சி இணைந்து வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைப் பயணம்

‘தி இந்து’ - பொதிகை தொலைக் காட்சி இணைந்து வழங்கும் ‘குறையொன்றுமில்லை’ என்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைத் தொடர் இன்று இரவு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் நிகழ்ச்சியில், 1970 - களில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைப் பயணத்தில் ஏற்பட்ட சில நிகழ்வுகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். கல்கி கார்டனுக்கு விஜயம் செய்து அருளாசி வழங்கிய மா ஆனந்தமயி பற்றியும், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ‘சங்கீத கலா சிகாமணி’ விருது எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வழங்கப்பட்டது குறித்தும் காணலாம். 1979-ம் ஆண்டில் பாலாஜி பஞ்சரத்னமாலா தொகுப்பு உருவான விதம் குறித்தும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.

இதன் மறு ஒளிபரப்பை செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காணலாம்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x