Published : 02 Sep 2022 04:45 AM
Last Updated : 02 Sep 2022 04:45 AM

தமிழகத்தில் முதன்முறையாக - திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த கழிவுநீர் மேலாண்மை

திண்டுக்கல்லில் நடந்த ஒருங்கிணைந்த கழிவுநீர் மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜவுளித் துறை ஆணையர் வள்ளலார்.

திண்டுக்கல்

ஒருங்கிணைந்த கழிவுநீர் மேலாண்மைத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து திண்டுக்கல்லில் அதிகாரிகளுடன் மாநில ஜவுளித்துறை ஆணையர் வள்ளலார் ஆலோசனை நடத்தினார்.

திண்டுக்கல் நகரில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மூலம் அதிக கழிவுநீர் வெளியேறுகிறது. கழிவுநீரைச் சுத்திகரிக்கத் தனியாக சுத்திகரிப்பு நிலையமும் அமைந்துள்ளது. நகரில் வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரிக்க தனியாக சுத்திகரிப்பு நிலையம் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் சின்னாளபட்டியில் ஜவுளித் தொழிலில் முக்கிய அம்சமான சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தவிர்க்க தோல் தொழிற்சாலை கழிவுநீர், சாயப்பட்டறை கழிவுநீர், திண்டுக்கல் நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் என மூன்றையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த கழிவுநீர் மேலாண்மைத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

மாநில ஜவுளித்துறை ஆணையர் வள்ள லார் தலைமை வகித்தார். ஆட்சியர் ச.விசாகன், சுற்றுச்சூழல் முதன்மை விஞ்ஞானி சண்முகம், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மண்டல ஜவுளித்துறை துணை இயக்குநர் அம்சவேணி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கோட்டச் செயற்பொறியாளர் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சின்னாளபட்டி சாயப்பட் டறைகள் கழிவுநீரைச் சுத்திகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த கழிவுநீர் மேலாண்மைத் திட்டத்தை முதன்முறையாக திண்டுக்கல்லில் செயல்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி தோல் தொழிற்சாலை கழிவுநீர், நகரின் கழிவுநீர், சாயப்பட்டறை கழிவுநீர் ஆகியவற்றை ஒன்றிணைத்து சுத்திகரிப்பதன் மூலம் நீரின் கடினத் தன்மையை நன்கு குறைக்கலாம்.

மேலும் இந்தக் கழிவுநீர்களில் இருந்து குளோரைடு, சல்பேட் ஆகிய ரசாயனங்களைப் பிரித்தெ டுத்து அதை விற்பனை செய்வதன் மூலம் சுத்திகரிப்புச் செலவைக் குறைக்க முடியும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தவும் முடியும், என சுற்றுச்சூழல் விஞ்ஞானி சண்முகம் எடுத்துரைத்தார்.

மூன்று கழிவுநீர்களையும் சேர்த்து சுத்திகரித்து ரசாயனங் களைப் பிரித்தெடுக்கும் முறை குறித்து குழு அமைத்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x