

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின்குறுக்கே 1950ம் ஆண்டு கட்டப்பட்டது. எல்லீஸ் தடுப்பணை 70 ஆண்டுகள்பழமைவாய்ந்த தடுப்பணையாகும். இந்த எல்லீஸ் அணைக்கட்டின் வலதுபுறம் உள்ள 4 மதகுகளும் சென்ற ஆண்டு பெய்தகனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் வந்தவெள்ளம் காரணமாக உடைந்தது.
தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும் சாத்தனூர் அணையில் இருந்துதிறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் அதிகமாக வரும் தண்ணீர் ஆற்றில் சமநிலையில்செல்லவில்லை. இதனால்உடைப்பு ஏற்பட்ட பகுதியில்மிகப்பெரிய பள்ளமாகவும்பாதையாகவும் உருவாகி தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் உடைப்பு தொடர்ந்து ஏற்பட்டது.
இதனால் ஏனாதிமங்கலம் - விழுப்புரம் சாலை விரைவில் துண்டிப்பு ஏற்படும் நிலைஉள்ளது. இதனால் ஏனாதிமங்கலம், எரளூர், கரடிப்பாக்கம், வளையாம்பட்டு, மேலமங்கலம்,செம்மார் ஆகிய 6 கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த ஆற்று நீர்கி ராமங்களுக்கு சென்றால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்.
இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் ஆட்சியர் மோகன்சம்பவ இடத்திற்கு வந்துஅதிகாரிகள் மற்றும் போலீஸாருடன் இணைந்து தடுப்பணையிலிருந்தும் நீர்வெளியேற்றப்படுவதால் கரைகள் சேதமடையாத வண்ணம் கரைகளை காத்திடும்வகையில் கருங்கற்களை கொண்டு கரைகளை பலப்படுத்திடும் பணியில்ஈடுபட்டனர்.
தென்பெண்ணை ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் கரையோரமாக வருவதால் ஆற்றின்நடுப்பகுதியில் செல்வதற்காக தடுப்பணையின் நடுப்பகுதி கட்டை சிமென்ட் தூண்ஆகியவற்றை டெட்டனேட்டர் குச்சி வெடிமருந்து போட்டு உடைத்து ஜேசிபிஇயந்திரத்தால் அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டுதடுப்பணை உடைக்கப்பட்டபோதிலிருந்தே அரசிற்கும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்ககோரிக்கை வைத்திருந்தோம் ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.